அரியலூர் : அரியலூர் மாவட்டம், செந்துறை காவல்துறை சார்பில் 14.10.2022 இன்று முப்பெரும் விழா நடைபெற்றது. அதில் முதல் கட்டமாக போதைப்பொருள் ஒழிப்பு, இணைய குற்றத்தை தடுத்தல், சாலை விதிகளை பின்பற்றுவது குறித்த பிரமாண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. செந்துறை பிள்ளையார் கோவில் அருகே தொடங்கி இந்த பேரணியை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ் கான் அப்துல்லா, அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் செந்துறை அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பொய்யாத நல்லூர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பொன்பரப்பி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 1000 மாணவர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து திருமண மண்டபத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கு விழாவும் வெற்றி நிச்சயம் என்ற வினாடி வினா போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
விழாவின் சிறப்பு விருந்தினராகிய அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள் தலைமை தாங்கி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள். இதனைத் தொடர்ந்து வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினர்களாக அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ரவிசேகரன் அவர்கள் (இணைய குற்றப்பிரிவு) மற்றும் திரு.காமராஜ் அவர்கள்(மதுவிலக்கு அமலாக்க பிரிவு) கலந்து கொண்டனர்.விழா நிகழ்ச்சி ஏற்பாடுகள் அரியலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சங்கர் கணேஷ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. போட்டிக்கான ஏற்பாடுகளை செந்துறை காவல் ஆய்வாளர் திரு.அன்பழகன், செய்தார்கள்.