திருவள்ளூர்: பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரி (தன்னாட்சி]யில் வரலாற்று துறையின் முப்பெரும் விழா கல்லூரி முதல்வர் முனைவர் தில்லை நாயகி தலைமையில் நடைபெற்றது. துறைத்தலைவர் முனைவர். மாறவர்மன் இவ்விழாவின் நோக்கத்தை சிறப்பாக எடுத்துக் கூறினார்.முனைவர் ஜெகஜீவன்ராம் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார். முனைவர் கோ. கோ.ஏசுபாதம்,ஜேசுதாஸ் ஆரோக்கியம், மற்றும் முனைவர்.ஏ. இரவி ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர். கல்லூரி கல்வி இயக்ககம், இணை இயக்குநர் (ஓய்வு)
முனைவர்.கோவிந்தராஜ்,மண்ணியலும் வரலாறும் என்ற தலைப்பில் உரையாற்றி மண்ணியலுக்கும் வரலாற்றுக்கும் உள்ள பிரிக்கமுடியாத தொடர்பினை விவரித்து கூறினார்கள்.
மேலும் சேலம் வரலாற்றுச் சங்கம் பொதுச் செயலாளர் பர்னபாஸ், தமிழனின் தாய்மடி கீழடி என்ற சிறப்பு மிகு தலைப்பில் தமிழ் மற்றும் தமிழனின் தொன்மையையும் தமிழ் கலாச்சாரத்தின் பழம் பெரும் மதிப்பீடுகளையும் எழுத்துக் கூறினார். தொடர்ந்து சிந்துவேளி நாகரிகத்திற்கு இணையானதாக கீழடியில் நிலவியிருந்த தமிழரின் நாகரிகம் என்பதை விவரித்து கூறினார். தமிழக அரசின் ஆய்வு புத்தக வெளியீடு “இரும்புக்காலம்”கீழடியில் வாழ்ந்த மக்களால் உலகில் முதன் முதலில் இரும்பு 2600 வருடங்களுக்கு முன்பதாக பயன்படுத்த பட்டிருப்பதை ஏ.பர்னபாஸ் ஆய்வின் அடிப்படையில் எடுத்து திறம்பட கூறினார்கள். இந்தவிகழ்வை முனைவர் க.வீரன் தொகுத்து வழங்கினார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு