கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பதிவுத்துறை அலுவலகத்தில் சார் பதிவாளராக பணிபுரியும் திரு.சிவக்குமார் என்பவர் பணியில் இருக்கும் போது கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த வீரமணி மற்றும் ராஜா ஆகிய இருவரும் அசிங்கமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்து, பணி செய்ய விடாமல் தடுத்ததாக கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மோகன்ராஜ் அவர்கள் இவ்வழக்கு தொடர்பாக விரைவாக விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் திரு.இரவிச்சந்திரன் அவர்கள் விசாரணை செய்ததில் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த வீரமணி (53), ராஜா(39) , ஆகிய இருவரும் பத்திரப்பதிவு சம்பந்தமான பிரச்சனையில் பதிவுத்துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து சார் பதிவாளர் -1 ஐ அசிங்கமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்து, அவரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்தது தெரியவரவே குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.