திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டான்கோயில் பகுதியில் போலீசாருக்ககு கிடைத்த இரகசிய தகவலின் படி, சோதனை செய்த போது அரசு அனுமதியின்றி உரிமம் பெறாமல் சட்ட விரோதமாக வெடி பொருட்கள் தயாரிப்பு செய்த – ராஜபாண்டியன் (35). த/பெ. ராஜப்பா, மெயின் ரோடு, மாஞ்சேரி, ஆண்டான்கோயில், வலங்கைமான் என்பவர் கைது செய்யப்பட்டார். சிறப்பாக செயல்பட்டு சட்ட விரோத வெடி தயாரிப்பில் ஈடுப்பட்ட நபரை கைது செய்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவரகள் பாராட்டினார்கள்.
மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உரிமம் பெறாமல் வெடி பொருள் தயாரித்தல், வெடி கடைகளை நடத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவரகள் தெரிவித்துள்ளார்கள்