திருவாரூர்: எரவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியல் அரசு அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்ட – நன்னிலம் தாலுக்கா மனவாளநல்லூர், கீழத்தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் விக்கி @ விக்னேஷ் (வயது-23). என்பவர் கைது செய்யப்பட்டார்.மேலும், அரசு அனுமதியின்றி மணல் திருட பயன்படுத்திய Tractor பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு மணல் திருடிய நபரை கைது செய்த எரவாஞ்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ராமமூர்த்தி மற்றும் காவலர்களை திருவாரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc, (Agri)., அவர்கள் பாராட்டினார்கள்.அரசு அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.