பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் கல்லாற்றில் அரசு அனுமதியின்றி மணல் கடத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி வ.களத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.ஜெயராமன் நிலைய காவலர்களுடன் மேற்கொண்ட தனிக்கையில்
பாண்டகப்பாடி to பசும்பலூர் செல்லும் சாலையில் பிம்பலூர் மண் ரோட்டில் அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த 1. ராமகிருஷ்ணன் (52) , 2.சாமிகண்ணு 36, 3.பெரியசாமி 35 , 4.கலியமூர்த்தி 38) மற்றும் 5.கந்தசாமி (40) அனைவரும் பசும்பலூர் கிராமம் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து மாட்டு வண்டியுடன் ரூபாய் 2500/- மதிப்புள்ள மணலை பறிமுதல் செய்து காவல் நிலையம் வந்தார். மேற்படி நபர்கள் மீது உதவி ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை