இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.விக்னேஷ்வரன் தலைமையில் காவலர்கள் ரோந்து சென்ற போது சாயல்குடியிலிருந்து செவல்பட்டி செல்லும் சாலையில் உள்ள மீன் கம்பெனிக்கு பின்புறம் அரசு அனுமதியின்றி, சட்டவிரோதமாக லாரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த தீபன், ராமச்சந்திரன் மற்றும் சேதுபதி ஆகிய மூவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
மேலும், மணல் அள்ளப் பயன்படுத்திய JCB வாகனம் மற்றும் இரண்டு லாரிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.