திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய குற்ற எண்: 417/20 பிரிவு 379(மணல் திருட்டு) இந்திய தண்டனைச் சட்டம் சட்டப்பிரிவு மாற்றம் 120(பி),379 இ.த.ச உடன் இணைந்த 21(1)(iv) கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் (முறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தல்) சட்டம் 1957. வழக்கில் எதிரிகளான அம்பாசமுத்திரம், பொட்டல், ராஜா நகரைச் சேர்ந்த அந்தோணிசாமி என்பவரின் மகன் ஜான் பீட்டர்(29), அம்பாசமுத்திரம், பொட்டல், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன்களான ஆத்தியப்பா(27), பால்ராஜ் (35), சேரன்மகாதேவி, அழகப்பபுரம் நாராயணசுவாமி கோவில் தெருவைச் சேர்ந்த ஹரிராம் என்பவரின் மகன் மாரியப்பன் (25), ஆகிய நான்கு நபர்கள் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமான மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் திருமதி.S.A.G. சகாய சாந்தி அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், எதிரிகள் ஜான் பீட்டர், பால்ராஜ் ஆத்தியப்பா, மாரியப்பன், என்பவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை 14.09.2020 இன்று கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் பாளை மத்திய சிறையில் சமர்பித்தார்.