கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் 17.11.2021மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட M. ஒட்டப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் வேடியப்பன் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருவதாகவும்,
கடந்த 10.11.2021 ஆம் தேதி மாலை பள்ளி முடித்து அனைத்து அறைகளையும் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்று விட்டதாகவும், மறுநாள் காலை சுமார் 11.30 மணிக்கு அப்பள்ளியில் பயிலும் மாணவர் மூலம் கணினி அறை உடைக்கப்பட்டு தகவல் தெரிந்தது.
தலைமையாசிரியர் உடன் மற்றொரு ஆசிரியரும் சென்று பார்த்தபோது பள்ளியின் கணினி அறை உடைக்கப்பட்டு Acer கம்பெனியை சேர்ந்த 8 கம்ப்யூட்டர், மவுஸ் மற்றும் கீ போர்டு உள்ளிட்டவை திருடு போய் இருந்ததாகவும். மேற்படி 15.11.2021 அன்று தலைமையாசிரியர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து பள்ளியில் திருடிய மூன்று குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடம் இருந்து 8 கம்ப்யூட்டர்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.