சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் சாதாரண கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாத்துரை தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரபரமேசுவரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலாளர் விஜயகுமார் தீர்மானங்களை முன்மொழிந்தார். இக்கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் ஏ.சி மாரிமுத்து ஒன்றிய கவுன்சிலர்கள் அண்ணாதுரை, சோமசுந்தரம், மலைச்சாமி, முருகேசன், பஞ்சவர்ணம், ஜெயலட்சுமி, ராதா, சுந்தரவல்லி, பாண்டியம்மாள், மற்றும் அலுவலர்கள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி