சென்னை: சுமார் 85 நபர்களிடம் தமிழ்நாடு அரசு துறைகளான அச்சு மற்றும் எழுதுபொருள் துறையில் உதவி பொது மேலாளர், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி பொறியாளர் , மக்கள் தொடர்பு துறையில் APRO மற்றும் சத்துணவு அமைப்பாளர் ஆகிய பணிகளுக்கு ஆட்களை சேர்த்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பதாக கூறியும் அதனைத் தொடர்ந்து பணி நியமன ஆணைகள் பெற்றுத்தருவதாக ஏமாற்றி ரூ.4.15 கோடி வரை நந்தினி மற்றும் அருண் சாய்ஜி வசூல் செய்தும் அதில் அவர்களுடைய கமிஷன் போக மீதித்தொகையை தமிழ்நாடு முஸ்லிம் லீக் மாநில செயலாளராக உள்ள ரேஷ்மா தாவூத் என்பவரிடம் கொடுத்துள்ளார்.
அவர் அப்பணத்தைக் பெற்றுக்கொண்டு போலியான பணி நியமன ஆணைகள் கொடுத்து ஏமாற்றியுள்ளதாக சென்னை , கொட்டிவாக்கம் எம்.ஜி.ஆர் நகர் , 12 – வது தெருவைச் சேர்ந்த ஆனந்தி என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் கொடுத்த புகார் மனுவின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டதில்.
சென்னை , வளசரவாக்கம் , காமராஜர் சாலை , எபிக் அப்பார்ட்மென்டைச் சேர்ந்த திருமதி . நந்தினி அவரது கணவர் அருண் சாய்ஜி மற்றும் டாக்டர் வாசுதேவன் நகர் விரிவு , திருவான்மியூர் , சென்னை -41 என்ற முகவரியைச் சேர்ந்த திருமதி . ரேஷ்மா தாவூத் ஆகியோர் 30.06.2021 – ந் தேதி மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி பிரிவு காவல் ஆய்வாளர் அவர்களால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
திருமதி . ரேஷ்மா தாவூத் மீது ஏற்கனவே 2016 , 2018 , 2019 – ம் ஆண்டுகளில் மத்திய குற்றப்பிரிவு மற்றும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வேலை வாய்ப்பு மோசடி மற்றும் குற்றம் கருதி மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது .
இதுபோல் போலியான நபர்களிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக பணம் எதுவும் கொடுத்து ஏமாற வேண்டாம் என சென்னை , மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.