திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி, போளுர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M.அறிவழகன் அவர்களின் மேற்பார்வையில், கடலாடி காவல் ஆய்வாளர் திரு.M. முரளிதரன் அவர்களின் தனிமையில் திருவண்ணாமலை தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.சத்யநந்தன் மற்றும் தனிப்படை காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில்
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், கீழ்பாலூர் கிராமம், பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த துரை, 65, என்பவர் அவரது தேனீர் கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்து, கடலாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைக்கப் பட்டது.
மேலும் அவரிடமிருந்து ஹான்ஸ் – 12 பாக்கெட், விமல் பான் மசாலா – 30 பாக்கெட்கள் என மொத்தம் ரூபாய் 23400 மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்