இராணிபேட்டை: அரக்கோணம் ரயில் நிலையத்தில் நேற்று காலை ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் திரு.சத்ரிகுமார் தலைமையில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் இருந்து அரக்கோணம் வழியாக திருவனந்தபுரம் செல்லும், வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் காலை 5.50 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலைய முதல் பிளாட்பாரத்தில் வந்து நின்றது. இந்த ரயிலில் இருந்து இறங்கிய இரண்டு இளைஞர்கள் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களை பார்த்தவுடன், தனது கையில் வைத்திருந்த பண்டல்களை பிளாட்பாரத்தில் வீசிவிட்டு தப்பி ஓட முயன்றனர்.
இதனால் சந்தேகம் அடைந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் சென்று அந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், அவர்கள் இருவரும் சென்னை கடற்கரை பகுதியை சேர்ந்த அன்சர் பாஷா(26) மற்றும் முடாசிர்(24) என்பதும் அவர்கள் வீசி சென்ற பொட்டலங்களை பிரித்து பார்த்தபோது, அதில் 8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதன் மதிப்பு ஒன்றரை லட்சம் இருக்குமென கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இரண்டு இளைஞர்களையும், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்