தஞ்சை : தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக பாபநாசம் துணை கண்காணிப்பாளர் திருமதி. பூரணி, அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதனை தொடர்ந்து இதில் சம்பந்தபட்டவர்களை உடனடியாக இனம் கண்டு கைது செய்யுமாறு அய்யம்பேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் அடைப்படையில் அய்யம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வனிதா , உதவி ஆய்வாளர் தலைமையில் திரு. ராஜேஷ் குமார் , சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.முருகதாஸ், மற்றும் காவலர் சிவா, ஆகியோர் கொண்ட போலீசார்கள் இப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார்கள்.
இந்நிலையில் இன்று (16 3-2023), அய்யம்பேட்டை தைக்கால் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் போலீசார் அங்கு திடீர் சோதனை மேற்கொண்டார்கள், அங்கு ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வந்த ரங்கநாயுடு மகன் சேதுராமன் (50), மற்றும் கலியபெருமாள் மகன் அறிவழகன் (44), ஆகியோரை கைது செய்து அவர்கள் ஆன்லைன் லாட்டரி வியாபாரத்திற்கு பயன்படுத்திய ஆறு செல்போன்கள் மற்றும் பணம் 20000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றிய அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகிறார்கள் .
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்