தேனி : ”வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் வரிகளுக்கேற்ப தேனி மாவட்டம், கம்பம் நகர் பகுதியில் பாதுகாப்பு பணியின் போது உதவி தேவைப்பட்ட முதியவரின் தேவையறிந்து அத்தியாவசிய பொருட்கள் கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் கம்பம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வழங்கினார்கள்.
கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கண்பார்வையற்ற முதியவருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி, கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க அவருக்கு முகக்கவசம் கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்கள் வழங்கினார்.
கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தன்னார்வலர்களுடன் இணைந்து வயது முதிர்ந்த ஏழை, எளியோர்களுக்கு இலவசமாக அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் முகக்கவசங்கள் வழங்கி காவல்துறை உங்கள் நண்பன் என மக்களின் மனம் கவர்ந்த சார்பு ஆய்வாளர் திரு.திவான்மைதீன் அவர்கள்.