சென்னை : சென்னை புறநகர் பகுதிகளில் குட்கா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு அவ்வப்போது புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து அம்பத்தூர் காவல் துணை ஆணையர் திருமதி. தீபா சத்தியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதனையடுத்து தனிப்படை போலீசார் 350 கிலோ குட்கா பறிமுதல் செய்து இருவரை கைது செய்துள்ளனர்.
சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, காமராஜர் நகர், பாலவேடு, முத்தாபுதுபேட்டை போன்ற பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெற்று வருவதாக, அம்பத்தூர் காவல் துணை ஆணையர் திருமதி.தீபா சத்தியன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது ஆவடியில் விற்பனைக்காக கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 கிலோ குட்கா மற்றும் முத்தாபுதுப்பேட்டை பகுதியில் 200 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக ஆவடியை சேர்ந்த மகேந்திர குமார் மற்றும் முத்தாபுதுப்பேட்டை சேர்ந்த பொன்ராஜ் என்பவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது. மேலும் குட்கா கடத்தலில் தொடர்புடையவர்கள் யார் யார் என பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பத்தூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
K.ஐசக் டேவிட்