சென்னை : T-1 அம்பத்தூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், அம்பத்தூரில், மேனாம்பேடு, மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை நீரால் சூழ்ந்துள்ள பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். மேலும் அங்கு குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை காவல் குழுவினர் மோட்டார் மூலம் வெளியேற்றி சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்துள்ளனர். அத்துடன், அம்பத்தூர், மேனாம்பேடு பகுதிகளில் உணவு பொட்டலங்கள் மற்றும் குடிநீர் வழங்கினர். இதே போல, T-6 ஆவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்பேத்கர் நகர், பருத்திப்பட்டு ஆகிய பகுதிகள், T-15 SRMC காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் சுற்றுப்புற பகுதிளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் மூலம் அகற்றியும், அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்கியும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
