திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார் ரெட்டி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு, துணை காவல் கண்காணிப்பாளர் திரு.T.வெங்கடேசன் அவர்களின் மேற்பார்வையில், திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.N.நிர்மலா, தலைமையில், உதவி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இணைந்து கீழ்பென்ணாத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, வழுத்தலங்குணம் கிராமத்தில் நடத்திய கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இவர்கள் அய்யம்பாளையம் கிராமத்தில் நடத்திய மற்றொரு சோதனையில் சுமார் 1500 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு மொத்தமாக 1700 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கீழே கொட்டி அழிக்கப்பட்டது.
அதுபோன்று போளூர் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் (பொறுப்பு) திருமதி. ஆ.மலர் மற்றும் காவலர்கள் இணைந்து நாவல் ஓடை பகுதியில் நடத்திய கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் சுமார் 400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இவர்கள் நடத்திய மற்றொரு சோதனையில் பெரியகீழ்பட்டு ஓடை அருகே சுமார் 600 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டும் மொத்தமாக 1000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கீழே கொட்டி அழிக்கப்பட்டது.
மேலும், தானிப்பாடி காவல் ஆய்வாளர் திருமதி. R. தனலட்சுமி தலைமையில், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இணைந்து தட்டரனை வனப்பகுதியில் நடத்திய கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது.
மங்கலம் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இணைந்து மன்சுராபாத் எம்.ஜி.ஆர். நகரில் நடத்திய கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது.
மொத்தமாக சுமார் 4100 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு அமலாக்கபிரிவு சார்பில் நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் 300 லிட்டர் கள்ளசாராயம் கைப்பற்றப்பட்டு, மொத்தமாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்குகளில் சம்மந்தப்பட்ட 18 எதிரிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்