திருவள்ளூர் : முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மீஞ்சூர் ஒன்றியம் தடபெரும்பக்கம் ஊராட்சி பொன் நகரில் மரக்கன்றுகள் நடும் விழா நேதாஜி சமூக சேவை அமைப்பு மூலம் நடைபெற்றது.
இதில் பொன்னேரி காவல் ஆய்வாளர் திரு.வெங்கடேசன் புவி வெப்பமயமாதலை தடுக்கும் வண்ணம் பசுமையான பூமியாக மாற்றும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் ஒன்றிய கவுன்சிலர் பரிமளம் ஜெயா, ஊராட்சி தலைவர் ரா. பாபு, துணைத்தலைவர் சபிதா பாபு, வார்டு உறுப்பினர்கள் நேதாஜி, ஸ்ரீதர் பாபு, மல்லிகா, பிரதாப், மற்றும் பலர் கலந்து கொண்டனர். நினைவு பரிசாக ஆய்வாளர் திரு.வெங்கடேசன் அவர்களுக்கு அப்துல் கலாம் எழுதிய புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்