சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மருதுபாண்டியர்களின் 220 வது குருபூஜை விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் தடை உத்தரவை மீறி பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையிலும் அபாயகரமான முறையில் நான்கு சக்கர வாகனத்தை நான்கு புறமும் தொங்கியபடி வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
இதில் திருபுவனத்தில் சேர்ந்த கவியரசன், திருப்பரங்குன்றம் சேர்ந்த ஆண்டிச்சாமி, திருபுவனத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் ஆகிய மூன்று நபர்களை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு.செந்தில்குமார் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 2 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தான் சிவகங்கை பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த அவர்கள் என்றும் தெரியவந்தது.
இதில் தொடர்புடைய மற்ற நபர்களையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன் தினம் அன்று தேவர் ஜெயந்தி விழா விற்கு இருசக்கர வாகனத்தில் செல்ல கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வாகனத்தை ஓட்டி வந்த நபர்களின் 105 இருசக்கர வாகனங்கள் மற்றும் அபாயகரமான வாகனத்தை இயக்கிய ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகிய என மொத்தம் 106 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்