திருநெல்வேலி: ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 22 சென்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர்.02.03.2022
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தை சேர்ந்த செல்வவடிவு நாராயணன் என்பவருக்கு சொந்தமான 22 சென்ட் இடம் கூடங்குளம் பகுதியில்உள்ளது.
அவ்விடத்தை போலி ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டதை அறிந்த செல்வவடிவு நாராயணன் நிலத்தினை மீட்டுத்தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப.,அவர்களிடம் மனு அளித்தார்.
மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயபால் பர்னபாஸ், அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.சாந்தி அவர்கள்,தலைமையிலான தலைமைக் காவலர் திரு.நாகராஜன், முதல் நிலை காவலர் திரு.சண்முகம் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான நிலத்தினை மீட்டு அதற்கான ஆவணத்தைதிருநெல்வேலிமாவட்டகாவல்ண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப.,அவர்கள்நிலஉரிமையாளரான செல்வவடிவு நாராயணன் அவர்களுக்கு 02.03.2022 இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள நிலத்தினை மீட்டு நிலத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்மற்றும்காவல்துறையினரைதிருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.