அரியலூர் : ஊரடங்கு உத்தரவால் நலிவடைந்து உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையின் கீழ் மாவட்ட காவல்துறையின் சார்பாக அரிசி பருப்பு முதலிய உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை-யை அவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று அளித்து உதவினார்கள். வீடு தேடி வந்து உதவும் காவல் அதிகாரிகளை மக்கள் மன நெகிழ்வுடன் பாராட்டினார்கள்.