தூத்துக்குடி : கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோட்டிலோவன்பட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்ட்ட சோதனைச் சாவடியை (29.11.2022) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும்போது, தூத்துக்குடி மாவட்டத்தின் எல்லைப்பகுதியான தோட்டிலோவன்பட்டி பகுதியில் இந்த சோதனைச் சாவடி புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைச் சாவடி காவல்துறையினர் வாகன சோதனை பணியை மேற்கொள்வதற்கு ஏற்ப அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது என்றும் மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பெண்கள், குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் குறித்தும் 2300க்கும் மேற்பட்ட ‘மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்டு ஏறக்குறைய 75000 பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டுள்ளது.
மேலும் சிறுவர்கள் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பள்ளி ஆசிரியர்கள் மூலம் காவல்துறையினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவில்பட்டி பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பராமரிக்கபட்டும், புதிதாக அமைக்கபட்டும் குற்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு காவல்துறையினரால் நடடிவக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
அதனை தொடர்ந்து சோதனை சாவடி வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மரக்கன்று நட்டார். இந்நிகழ்வின்போது கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுஜித் ஆனந்த், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. கிங்ஸ்லி தேவ் ஆனந்த், கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் திரு. விஜயகுமார், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி, கோவில்பட்டி கிழக்கு குற்றப் பிரிவு ஆய்வாளர் திருமதி. மங்கையற்கரசி, உதவி ஆய்வாளர் திரு. ரவிந்திரன் உட்பட காவல்துறையினர் மற்றும் கோவில்பட்டி கேர்.ஆர் குழுமம் நிறுவனத்தின் தலைவர் திரு. அருணாச்சாலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.