அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள் வழிகாட்டுதலின் படியும், இன்று 28/01/2022 ஆம் தேதி அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.மு.ராமன், மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.இ.மான்விழி மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.வை.அசோக் குமார் அவர்களின் தலைமையில் அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.ஞா.செங்குட்டுவன், காவல் உதவி ஆய்வாளர் திரு.அ.மணிகண்டன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) திரு.க.சிவனேசன் ஆகியோர் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும் இணையதளத்தில் குற்றவாளிகள் மூலம் பண இழப்பு ஏதேனும் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 155260 க்கு உடனடியாக தகவல் அளிப்பது குறித்தும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் எவ்வாறு புகார் செய்வது என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.