தூத்துக்குடி : புதுடெல்லியில் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் கீழ் செயல்படும் தேசிய விரல் ரேகை பதிவு கூடத்தால் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் அனைத்திந்திய அளவில் உதவி ஆய்வாளர்களுக்கான விரல் ரேகை நிபுணர் (Finger Print Expert) தேர்வு நடத்தப்பட்டது. இதில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் சுமார் 200க்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். மேற்படி தேர்வில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தனி விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர்கள் செல்வி. வைஜெயந்தி மாலா, திரு. அருணாச்சலம், திரு. பிரேம்குமார் மற்றும் திருமதி. பழனிச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு விரல் ரேகை நிபுணர்களாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மேற்படி தேர்ச்சி பெற்ற தூத்துக்குடி மாவட்ட விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் (10.04.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்படி விரல் ரேகை நிபுணர்களாக தேர்ச்சி பெற்ற உதவி ஆய்வாளர்களை பாராட்டி மென்மேலும் சிறப்பாக பணிபுரிய வாழ்த்தினார்.