குமரி:கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். திரு.இரா.ஸ்டாலின் IPS அவர்களின் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சித்திரங்கோடு சோதனை சாவடியில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது உரிய அனுமதி சீட்டு இன்றி கனிம வளம் ஏற்றி வந்த டெம்போவையும் அதன் ஓட்டுநர் வேர்கிளம்பியை சார்ந்த ஜான் போஸ்கோ என்பவரது மகன் அபிஷேக் 20 என்பவரை கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த நடவடிக்கையானது வரும் நாட்களில் மேலும் தீவிர படுத்தப்படும்.