நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை நடத்தினர். அனுமதியின்றி வெடி மருந்துகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையில் அவர் ஆவத்திபாளையத்தை சேர்ந்த ராஜசேகர் 25. என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து வெடி மருந்துகளை பறிமுதல் செய்தனர்.