தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் (04.09.2022), பகுதியில் ஸ்ரீவைகுண்டம் மண்டல துணை தாசில்தார் திரு. சுடலை வீரபாண்டியன் மற்றும் வருவாய்த்துறையினர் (03.09.2022) முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனந்தநம்பிகுறிச்சி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த 2 டாரஸ் லாரிகளை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் எந்தவித உரிய அனுமதியின்றி மணல் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து துணை தாசில்தார் திரு. சுடலை வீரபாண்டியன் அளித்த புகாரின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் திரு. அசோகன், வழக்குபதிவு செய்து மேற்படி டாரஸ் லாரிகளின் ஓட்டுநர்களான கன்னியாகுமரி மாவட்டம், குட்டக்குழி பகுதியை சேர்ந்த தேவராஜ் மகன் ஸ்டீபன் (43), மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் சவரக்கோடு பகுதியை சேர்ந்த செல்லமுத்து மகன் சதன் சதீஷ் (35), ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 2 டாரஸ் லாரிகளையும், 16 யூனிட் மணலையும் பறிமுதல் செய்தார்.