நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் பெருஞ்சேரி கிராமத்தில் டிராக்டர் மற்றும் ஜேசிபி மூலம் மணல் கொள்ளை நடைபெற்று வந்தது. இதனை குறித்த தகவல் தெரிய வந்ததை அடுத்து குத்தாலம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.பாபு ராஜா மற்றும் அவரது தனிப்படை சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனர் அங்கு தகவல் கிடைத்த படி அனுமதியின்றி மணல் அள்ளுவது தெரியவந்தது.
இதனையடுத்து அங்கு இருந்த 2 டிராக்டர்கள் மற்றும் ஜேசிபி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதில் டிராக்டர் டிரைவர் பெருஞ்சேரி நடுத்தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகன் ராஜ்மோகன் வயது(50) மற்றும் ஜேசிபி டிரைவர் பெருஞ்சேரி நடு தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வன் மகன் ரஞ்சித் பாலா வயது (22) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்மோகன் மற்றும் ரஞ்சித் பாலாவை கைது செய்து 2 டிராக்டர்கள் மற்றும் ஜேசிபியை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுபோன்ற மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் கூறியுள்ளார்கள்.















