திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டுத்தனமாக மண் (கிராவல்) அள்ளிய நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜம்புதுரைகோட்டை ஊராட்சி தலைவரின் கணவர் காட்டுராஜா மற்றும் மயில் ஆகிய இருவருக்கும் சொந்தமான இரண்டு லாரியை மாவட்ட கண்காணிப்பாளர் தனிப்பிரிவு காவல்துறையினர் திருட்டுமண்ணுடன் பிடித்து அம்பாத்துரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதேபோல் விளாம்பட்டி அருகே எத்திலோடு பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த லாரியை மடக்கி பிடித்து விளாம்பட்டி காவல் நிலையத்தில் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.