சேலம்: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள செந்தாரப்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கெங்கவல்லி ஒன்றிய செயலாளராக கக்கன் செல்வகுமார் இருந்து வருகிறார். செந்தாரப்பட்டி பேருந்து நிலையம் அருகில் திருமா பயிலகம் என்ற நூலகத்தை நடத்தி வருகிறார் அந்த நூலகம் அருகே நேற்றிரவு அனுமதி பெறாமல் தந்தை பெரியாரின் சிலையை வைத்துள்ளார். இந்நிலையில் தகவலறிந்த கெங்கவல்லி வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையிலான வருவாய் துறையினரும், ஆத்தூர் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெரியாரின் சிலையை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர்.
மேலும்அனுமதி பெறாமல் சிலையை வைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர்கக்கன் செல்வகுமார் அவரது தம்பி விசிக நகர செயலாளர் ரமேஷ் வளவன் (எ) திருமாவளவன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், அனுமதி பெறாமல் சிலை வைத்து அகற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது,மேலும் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.