கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட கனிம வளத்துறை அலுவலர்கள் ரோந்து பணியின்போது தொரப்பள்ளி அக்ரஹாரம் வழியாக வந்த டிராக்டர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அனுமதியின்றி கற்களை கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து அட்கோ காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.