குமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.திரு.இரா.ஸ்டாலின் IPS அவர்கள் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வடசேரி காவல் நிலைய போலீசார் வெட்டூர்ணிமடம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது கனிமவளத்துறையின் எந்தவித அனுமதிச்சீட்டும் இன்றி சட்டவிரோதமாக கனிம வளம் ஏற்றி வந்த ஆறு டாரஸ் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நடவடிக்கைகள் மேலும் தீவிரபடுத்தப்படும் என எச்சரிக்கப்படுகிறது.