கோவை : ஊரடங்கு காரணமாக வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு, கோவை மாநகர, E1 சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, விமான நிலையம் பின்புறம் மட்ட சாலையில் குடியிருந்து வரும் கட்டிட தொழிலாளர்கள் பத்து குடும்பத்தாருக்கு காவல் ஆய்வாளர் போக்குவரத்து கிழக்கு திரு.சண்முகம், உதவி ஆய்வாளர் திரு.முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சண்முகம், முதல் நிலை காவலர் திரு.அன்பரசு ஒருவாரத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கினார்கள்.
காவல்துறையினர் என்றால் கடினமானவர்கள் என்று பொதுவாக பேசப்படும் சமூகத்தில், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திற்கும் இச்சமயத்தில், ஏழை, எளியவர்கள் மீது இவர்களை போன்று காவல்துறையினர் காட்டும் அக்கறை பாராட்டுதற்குரியது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்