இராமநாதபுரம்: கொரானா நோய்த்தொற்று பரவுவதை தடுக்க தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 24.05.2021 முதல் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள் வழிகாட்டுதலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள ஏழை, எளிய மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களும், உணவுப் பொட்டலங்களும் காவல்துறையினரால் வழங்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று 04.06.2021-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 70 முன்களப் பணியாளர்களுக்கு தன்னார்வலர்களுடன் இணைந்து அரிசி உட்பட மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இ.கார்த்திக், இ.கா.ப., அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியை முதுகுளத்தூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.ராகவேந்திரா. K ரவி, காவல் ஆய்வாளர் திரு.தமிழ்செல்வன், சார்பு ஆய்வாளர்கள் திரு.சரவணன் மற்றும் திரு.விக்னேஷ்வரன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.