இராமநாதபுரம்: தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 24.05.2021 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று 03.06.2021-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாத்தான்குளம் பகுதியில் தன்னார்வலர்களுடன் இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இ.கார்த்திக், இ.கா.ப., அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி, அரிசி உள்பட அத்தியாவசியப் பொருட்களை நிவாரணமாக வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் திரு.வெள்ளதுரை, இராமநாதபுரம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் திரு.மலைச்சாமி மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.ஜோதிமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.