திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், குடவாசல், வடக்கு முஸ்லீம் தெருவை சேர்ந்த சந்துரு என்பவரின் மகன் காளிதாஸ் மற்றும் குடவாசல், வடக்கு தெருவை சேர்ந்த ஜகதீஷ் என்பவரின் மகன் விஷ்ணு ஆகிய இருவரும் அத்திக்கடை, பஸ் ஸ்டாப் அருகில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவினை விற்பனைக்காக வைத்திருந்த போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறப்பாக செயல்பட்ட குடவாசல் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருT.P.சுரேஷ் குமார், அவர்கள் பாராட்டினார்கள்.