தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு மகேஸ்வரன் அவர்கள் உத்தரவுப்படி, பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர்(பொறுப்பு) திரு செங்கமலக் கண்ணன் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு.தென்னரசு தலைமையில் H.C. திரு.தனபால், திரு.தினகரன், திரு.ராஜா, திரு.தர்மராஜ் மற்றும் காவலர் திரு.மருது ஆகியோர்கள் அடங்கிய தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வெங்கட்ராமன் த/பெ.கல்யாணசுந்தரம் என்பவரிடம் விசாரணை செய்ததில் கஞ்சா மூட்டைகளை கடத்துவதற்காக அதிராம்பட்டினம்,மறவக்காடு, அலையாத்தி காட்டில் மறைத்து வைத்திருந்த வைத்திருந்த 220 கிலோ கஞ்சா மற்றும் படகை இயக்க வைத்திருந்த 5 லிட்டர் ஆயில் ஆகியவற்றை கைப்பற்றி வெங்கட்ராமன், முருகேசன் மற்றும் குமார் ஆகியோர்களை கைது செய்து அதிரம்பட்டினம் காவல் நிலையத்தில் 50/2020 u/s 8(c) & 20(II), (B) NDPS Act வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நமது செய்தியாளர்
குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்