திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc,(Agri.,) அவர்கள் திருவாரூர் மாவட்டத்தில் பதவி ஏற்றதிலிருந்து, அவர்கள் உத்தரவின் படி, திருவாரூர் மாவட்டதில் சட்ட விரோத மது விற்பனை, அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தொடர்ந்து தீவிர வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc,(Agri.,) அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, அவர்களே நேரிடையாக பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாடாகுடி பகுதியில் அதிரடி மதுவிலக்கு வேட்டை நடத்தினார்கள்.
அப்போது, நாடாகுடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் பொட்டு @ உலகநாதன் (வயது-55). என்பவர் வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில், அவர் வீட்டின் பீரோவில் பதுக்கி வைத்திருந்த 360-பாண்டிச்சேரி சாராய பாட்டில்கள் மற்றும் நாடாகுடி, மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் நடேசன் மகன் சுந்தர் (வயது-55). என்பவர் வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில் சாக்கு முட்டையில் மறைத்து வைத்திருந்த 140-பாண்டிச்சேரி சாராய பாட்டில்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்டது. அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்கள். சட்ட விரோத மது விற்பனை, அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொதுமக்கள் 9498100865 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும், புகார் தெரிவிப்பவர்களின் விபரம் இரகசியமாக காக்கப்படும் என்றும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri.)., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.