செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சுகுணா சிங் IPS அவர்களின் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் நடத்தபட்ட அதிரடியான சோதனையில் சட்டவிரோதமாக குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக,
செங்கல்பட்டு காவல் உட்கோட்டம் செங்கல்பட்டு தாலுகா,செங்கல்பட்டு நகரம்,பாலூர்,படாளம் காவல் நிலையங்களில் 15 வழக்குகளும், மாமல்லபுரம் காவல் உட்கோட்டம் மாமல்லபுரம்,திருக்கழுக்குன்றம்,மானம்பதி,காயார்,திருப்போரூர், கூவத்துர்,கல்பாக்கம்,சாட்ராஸ் காவல் நிலையங்களில் 17வழக்குகளும், மதுராந்தகம் காவல் உட்கோட்டம், மதுராந்தகம்,செய்யூர், சூனாம்பேடு, சித்தாமூர், ஒரத்தி, அணைகட்டு காவல் நிலையங்களில் 13 வழக்குகள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 45 வழக்குகள் பதிவு செய்தும், குற்றவாளிகள் கைது செய்தும், சுமார் 12,000 மதிப்புள்ள குட்கா,பான் மசாலா மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.