திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வார இறுதி நாட்களில் காவலர்களை பெருமளவில் ஒன்று திரட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ந ன்னிலம் உட்கோட்டம், குடவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திக்கடை சோதனை சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (28.07.2024) அதிரடியாக களத்தில் இறங்கி வாகன தணிக்கை செய்தார்கள்.
அப்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணியவும், நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது சீட் பெல்ட் அட்டாயம் அணிய வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்கள். மேலும், வாகன தணிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தக்க அறிவுரை வழங்கினார்கள்.