கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மோகன்ராஜ் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்துகொண்டு, இருசக்கர வாகனம் மற்றும் காரிலும் சென்று பூட்டிய வீடுகள் மற்றும் டாஸ்மாக் கடைகளை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச்செல்லும் சம்பவம் நடைபெற்றதையடுத்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை விரைவாக கைது செய்ய உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி திருக்கோவிலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பழனி மேற்பார்வையில், சங்கராபுரம் காவல் வட்ட ஆய்வாளர் திரு.பாண்டியன் அவர்களின் தலைமையில் வடபொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.மாணிக்கம், பகண்டை கூட்ரோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வி.சூர்யா, திருக்கோவிலூர் உட்கோட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு.பாண்டியன், தலைமை காவலர் திரு.மதுரைவீரன், மு.நி.கா திரு.சிவஜோதி, மு.நி.கா. திரு.வீரப்பன், மு.நி.கா.பாஸ்கரன், மு.நி.கா திரு.மணிமாறன், பெண் காவலர்கள் திருமதி.ஷகிலா. திருமதி.வனிதா கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் க்ரைம் காவலர் திரு.சிவராமகிருஷ்ணன் ஆகியோரை கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தொழில்நுட்ப உதவியுடன் தேடிவந்தனர்.
கடந்த 31.01.2023- ந் தேதி வடபொன்பரப்பி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் கூட்ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அதிவேகமாக வந்த HYUNDAI i20 காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் வந்தவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியுள்ளனர் பின்பு விசாரணையில் 1). கார்த்திக் 19, த/பெ.கோபி சேமத்தம்மன் புதுகாலனி, பெரம்பூர், சென்னை 2). பாலாஜி வ/23 த/பெ. ராஜசேகர், அரசு 5-வது தெரு, நேரு நகர், எருக்கஞ்சேரி, சென்னை, 3). சிந்து வயது 23, க/பெ.யுவராஜ், அரசு 5 -வது தெரு, நேரு நகர், சென்னை என்றும் கூறினார்கள்.
சந்தேகத்தின் பேரில் மூவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் தேவபாண்டலம் மற்றும் பகண்டை கூட்டுரோட்டில் வீடு வாடகை எடுத்து தங்கி ரிஷிவந்தியம், வடபொன்பரப்பி, தியாகதுருகம், சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு, கீழ்குப்பம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டிய வீட்டில் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்றதும், திருக்கோவிலூர் கனகந்தல் டாஸ்மாக்கடையை உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர், மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் ரூ.15,00000/- மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனம் கைப்பற்றபட்டுள்ளது மேலும் திருடிய நகைகள் மற்றும் பணத்தை வைத்து சங்கராபுரம் பகுதியில் 1 வீட்டுமனை வாங்கியதும் தெரியவருகிறது. விசாரணை முடித்து குற்றவாளிகள் மூவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர் கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 25,00,000/- ரூபாய் (வீட்டுமனை,கார், இருசக்கரவாகனம் உட்பட) மதிப்புள்ள களவாடப்பட்ட சொத்துக்களை மீட்ட தனிப்படையினரை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளார்.