திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வார இறுதி நாட்களில் காவலர்களை பெருமளவில் ஒன்று திரட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. (14.07.2024) நன்னிலம் உட்கோட்டம், பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேலங்குடி சோதனைச்சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் தனது அதிவிரைவு படை காவலர்களை கொண்டு அதிரடியாக களத்தில் இறங்கி வாகன தணிக்கை செய்தார்கள். மேலும், சோதனைச்சாவடி பணியிலிருந்த காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.