திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாக சீர்கேடுகளை கண்டித்தும் தாமதமாக நடைபெற்று வரும் மீஞ்சூர் இரயில்வே மேம்பாலம் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் கடகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் அறிவித்தார். அதன்படி இன்று மீஞ்சூர் பஜாரில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுணியம் பலராமன் முன்னிலையில் தமிழக அரசு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது மீஞ்சூர் இரயில்வே மேம்பால பணிகளை தாமதமாக நடைபெறுவதை கண்டித்தும் மீஞ்சூர் பேரூராட்சியில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதை கண்டித்தும் மழை நீர் வடிக்கால்வாய் அமைக்காததை கண்டித்தும் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களில் பொதுக்கணிப்பு இடங்கள் அமைக்காததை கண்டித்தும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா மீஞ்சூர் நகர செயலாளர் பட்டாபிராமன் துணை செயலாளர் தமிழரசன் அவைத்தலைவர் மாரி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர் .
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு