திருவள்ளூர் : திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சோழவரம் ஒன்றியம் அருமந்தை கூட்டுச்சாலையில் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு அருமந்தை கூட்டுச்சாலையில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் பொன்னேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பி. பலராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க கழக மாணவரணி செயலாளர் எஸ்.ஆர். விஜயகுமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்பொழுது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாரை வேட்பாளராக நிற்க வைத்தாலும் வெற்றி பெற பாடுபட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த பொதுக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் சோழவரம் பிரகாஷ், நாலூர் முத்துக்குமார், பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார், மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் பட்டாபிராமன், மாவட்ட எம்.ஜி.ஆர் இணை அணி செயலாளர் பி.டி.பானு பிரசாத், மாவட்ட கழக இன செயலாளர் பழவேற்காடு சுமித்ரா குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.ராஜேஷ், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள் ஊராட்சி கழக நிர்வாகிகள் கிளைக் கழக செயலாளர்கள் நகர கழக நிர்வாகிகள் பேரூர் கழக நிர்வாகிகள் அதிமுக மூத்த முன்னோடிகள் இளைஞர்கள் மகளிர் அணிகள் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் சோழவரம் மேற்கு ஒன்றிய எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் விச்சூர் வெஸ்லி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு