திருச்சி : திருச்சி மாநகரத்தில் கடந்த (25.10.22), -ம்தேதி தென்னூர் அருகே நின்றுக்கொண்டிருந்த நபரிடம் கத்தியை காண்பித்து பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி அரவிந்த் என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில், குற்றவாளி அரவிந்த் என்பவர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி வீட்டில் துப்பாக்கி குண்டுகளை திருடியது சம்மந்தமாக ஒரு வழக்கும், தள்ளுவண்டி கடைக்காரர், பனியன் கடைக்காரர், இருசக்கர வாகன மெக்கானிக் ஆகியோரிடம் கத்தியை காண்பித்து பணத்தை பறித்து சென்றதாக 3 வழக்குகளும், முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தை எரித்து கொலை மிரட்டல் விடுத்ததாக 1 வழக்கு உட்பட 12 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. எனவே குற்றவாளி அரவிந்த் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதால் குற்றவாளியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள்.