சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா என் மணக்குடி ஊராட்சி மன்றம் தரைப்பாலம் நீந்தி செல்லும் அவலம். மணக்குடி பேருந்து நிறுத்தம் அருகில் உள்ளது. தரைப்பாலம் வெட்டுக்காடு, மணக்குடி, திட்டுகோட்டை, இன்னும் பல ஊர்களுக்கு செல்லும் சாலையாக உள்ளது. மழைக்காலங்களில் பள்ளி மாணவர்களும் பொது மக்களும் தரை பாலத்தில் நீந்தி வர கூடிய அவலநிலை ஏற்படுகிறது. அதிகாரிகள் பார்வையிட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. அக்பர் அலி