இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் வழிகாட்டுதலின் பேரில், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் அவர்கள் தலைமையில் சைபர் கிரைம் காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் சென்று பொதுமக்களிடம் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான பேருந்து நிலையம், அரசு அலுவலக வளாகங்கள், பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் சைபர் கிரைம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.