திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் முதல் திருவொற்றியூர் வரை உள்ள நெடுஞ்சாலையானது குண்டும் குழியுமாக மாறியுள்ளது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முறையாக சாலையை சீரமைக்காததால் தொடர்ந்து அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது மீஞ்சூர் அரியன்வாயல் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்த அஜித் (25), அவரது மனைவி ஐஸ்வர்யா (22) மூன்று மாத கர்ப்பிணியான இவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பட்டமந்திரி அருகே லாரி மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணிப் பெண் கணவன் கண் முன்பாக உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். கணவன் இரண்டு கால்களும் உடைந்து நசுங்கி படுகாயம் அடைந்த அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து உள்ளனர். மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நம்பர் பிளேட் இல்லாமல் விபத்தை ஏற்படுத்திய சாம்பல் கழிவு லாரியை பறிமுதல் செய்து ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து கனரக வாகனங்கள் செல்லும் சாலையை முறையாக சீரமைக்காததே இதுபோன்ற விபத்துக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அடிக்கடி விபத்துக்களை ஏற்படுத்தும் இப்பகுதியில் வேகத்தடை அமைக்கவும் கோரிக்கை வைத்திருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு