சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பேரறிஞர் அண்ணா கிளை நூலகத்தில் மகளிர் தின விழா மற்றும் சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் செந்தில்குமார் எழுதிய”பெரிதினும்பெரிதுகேள்”என்னும்நூல்அறிமுகவிழாநடைபெற்றது. இவ்விழா சிவகங்கை மாவட்ட நூலக அலுவலர் ஜான் சாமுவேல் தலைமையில், வாசகர் வட்டத் தலைவர் எல்.ஜெயச்சந்திரன், எழுத்தாளர் கூட்டமைப்பு தலைவர் எஸ்.எல்.எஸ் பழனியப்பன் ஆகியோர் முன்னிலையில் நூலகர்ஜெயகாந்தன்முன்னதாகஅனைவரையும் வரவேற்றார், ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரி பேராசிரியர் கோபிநாத், ஆபிசீஅ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் அமுதா மாவட்ட நூலக ஆய்வாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
நான் வியந்த சாதனை பெண்மணிகள் என்னும் தலைப்பில் முனைவர் ஹேமாமாலினி கருத்துரையாற்றினார், இலக்கியவட்டம் சிதம்பர பாரதி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எழுதிய “பெரிதினும் பெரிது கேள்” என்னும் நூலை அறிமுகம் செய்து பேசினார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஏற்புரை வழங்கினார், தொடர்ந்து நூலகத் துறையில் பணிபுரியும் மகளிருக்கு நினைவு பரிசுகள் வழங்கி அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை கூறினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்